OFFICE BEARERS

K.DANASEKAR (Income tax) - Secretary General - 94459 53388 - kdanasekar@yahoo.com
C.SETHUPATHY, President (ONGC) - 9442500777
R.SENTHAMARAIKANNAN (Engine Factory,Avadi), Working President - 9600159436
R.SELVAM FERNANDO, (IOB)Treasurer - 9381709257

Our Affiliates: ATOMIC ENERGY(DAE), AAI, BHEL(Ranipet), BHEL (Tiruchirapalli),BSNL, CLRI, CORDITE FACTORY(DEFENCE)-Ooty, CSIR, ENGINE FACTORY (Defence), GIC, GST & CENTRAL EXCISE, INCOME TAX, JIPMER, IOB,ISRO, OCF, ONGC, INDIA POST, RAILWAY, REPCO BANK, SBI,SHASTHRI BHAWAN(CHENNAI), SYNDICATE BANK.UTTAR BIHAR GRAMIN BANK, BACKWARD CLASSES EMPLOYEES FEDERATION(AP)

Monday, August 12, 2013

The Tamilnadu Incometax Backward Class Employees Cultural and Welfare Peravai conducted one day awareness programe on Competetive examinations and Crash course for the Rural women students at Bharathi Women Arts and Science College at Thachur village, Kallakurichi, Villupuram District. Faculties from Income tax Department Mr.Baskaran, ITO, Mr.Veerabaghu, ITI, M.Muthusaravanan, OS took the classes along with Mr.K.Kumar, Genl.Secretary and Mr.K.Danasekar, President of the Peravai. More than 400 students participated and gained lot of informations vide the workshop.































Sunday, August 4, 2013



சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் துணைப்பேராசிரி யர்கள், பேராசிரியர்கள் நியம னத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டுவர நீதியரசர் நாகமுத்து வழங்கிய சிறப்பான தீர்ப்பையொட்டி, சி.பி.அய். விரைந்து விசாரணை நடத்திட வேண்டும் என்றும், தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் குடியரசுத் தலைவரிடம் இது தொடர்பான மனுக்களைக் கொடுக்க வேண்டும். பிரதமரின் அலுவலக இணை அமைச்சர் நாராணயசாமியிடம் மனு அளிக்க வேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை வரவேற்று நடந்த சிறப்பு பொதுக் கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று மாலை (2.8.2013) சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு தலைமை வகித்து  பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அவர்கள்:-
நம்முடைய வசந்தா கந்தசாமி  சென்னை அய்.அய்.டி. கணிதத் துறையில் கடந்த 1988 ஆம் ஆண்டு விரிவுரையாளராக நியமிக் கப்பட்டார். 1995ஆம் ஆண்டு நடைபெற்ற இணைப் பேரா சிரியர் பணிக்கான தேர்வின் போதும், 1996ஆம் ஆண்டு நடை பெற்ற பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும் அவர் தன்னை தேர்வு செய்யுமாறு கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
அந்தப் பணிகளுக்குத் தேவை யான அனைத்துத் தகுதிகளையும், அனுபவத்தையும் பெற்றிருந்த போதிலும் அவரை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. மாறாக அவரை விடத் தகுதிகள் குறைந்த நபர்கள் அந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
மேலும் இந்தத் தேர்வுகளின் போது இடஒதுக்கீட்டு விதி முறைகள் சரியாக பின்பற்றப் படவில்லை. இடஒதுக்கீட்டை பின்பற்றி இருந்தால், பிற்படுத்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த நான் நிச்சயம் தேர்வாகி இருப்பேன் என்று வசந்தா கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத் திற்கு சென்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் சிறப்பான தீர்ப்பை  வழங்கினார்.
1995ஆம் ஆண்டு முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும்.
இந்தப் பணி நியமனங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந் திருப்பது தெரிய வந்தால், அதற்கு பொறுப்பானவர்கள்மீது குற்ற வழக்குகளை பதிவு செய்து சட்டப்படி சி.பி.அய். நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மனுதாரர் வசந்தா, 27.7.1995 முதல் இணைப் பேரா சிரியராகவும், 18.12.1996 முதல் பேராசிரியராகவும் அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாக கருதப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண் டும் என்று நீதியரசர் கூறியுள்ளார்.
இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் - மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி!
சமூகநீதி என்பது சலுகை களோ, பிச்சைகளோ அல்ல நம்முடைய மறுக்க முடியாத உரிமை, யாரும் மறுக்க முடியாத பிறப்புரிமை என அரசியல் சட் டத்திலேயே சொல்லப்பட் டுள்ளது.
அரசியல் சட்டத்தில் சொல் லப்பட்டு இருக்கும் முதல் நீதியே சமூக நீதிதான். அதற்கு அடுத் தப்படியாகத்தான் பொருளாதார நீதி, அரசியல் நீதியாகும். இதை அரசியல் சட்ட கர்த்தாக்கள் சொல்லி இருக்கிறார்கள்.
நீதியரசர் எஸ். நாகமுத்து வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் சட்டத்தில் இருப்பதை நாங்கள் வலியுத்துகிறோம் என சொல்லி யுள்ளார்.
சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (H.R.D)
என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர் ஜாதி பார்ப்பனரே வந்த தோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண் டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து அய்.அய்.டி. என் றால், அய்யர், அய்யங்கார் டென் னான்சி (Iyer, Iyyangar Tennancy) என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது.
தகுதி திறமை என்ற அளவு கோல்படிப் பார்த்தாலும் முன் னேறிய ஜாதியினருக்குச் சளைக் காத ஆற்றல் உள்ள பார்ப்பன ரல்லாதவர்கள் S.C.S.T., OBC., MBC போன்ற வகுப்பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதியற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டுவிட்டு ஓடும் படியாகச் செய்வது - தலைமையை அபகரித் துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே - தர்ம மாகவே - இருந்து வந்துள்ளது!
இப்படிப்பட்ட நிறுவனத்தில் எத்தனையோ பேராசிரியர்கள் இருந்தாலும், தன்னந்தனியாக நின்று போராடியவர் என்ற பெருமைக்காக கடந்த தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வசந்தா கந்தசாமிக்கு வீராங்கனை கல்பனா சாவ்லா விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
எனவே சென்னை அய்.அய்.டி. யில் நடைபெற்றுள்ள பேராசிரி யர் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை, சி.பி.அய். விரைந்து முழுமையாக விசாரணை நடத்தி, இதில் நடந்துள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  வேண்டுகோள் விடுத்தார்.



சமூகநீதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய
நீதிபதி நாகமுத்துவிற்கு அரங்கில் பாராட்டு
சென்னை அய்.அய்.டி.யில் சமூகநீதிக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் அட்டூழியங்களைக் கண்டுபிடிக்க சி.பி.அய். விசாரணைக்கு உத்தர விட்டதற்கும், அங்கு நடைபெற்று வரும் முறைகேடுகளால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச் சலுக்கு ஆளாகிய கணித மேதை பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்களுக்கு, சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் சிறப்பான தீர்ப்பை வழங்கியதற்காக அவர்களுக்கு இந்த சிறப்பு கூட்டத்தின் வாயிலாக அரங்கில் அமர்ந்தவர்கள் கைதட்டி வாழ்த்தும் பாராட்டுதல்களும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அறிவித்தவுடன் தெரிவித்துக் கொண்டனர்.