OFFICE BEARERS

K.DANASEKAR (Income tax) - Secretary General - 94459 53388 - kdanasekar@yahoo.com
C.SETHUPATHY, President (ONGC) - 9442500777
R.SENTHAMARAIKANNAN (Engine Factory,Avadi), Working President - 9600159436
R.SELVAM FERNANDO, (IOB)Treasurer - 9381709257

Our Affiliates: ATOMIC ENERGY(DAE), AAI, BHEL(Ranipet), BHEL (Tiruchirapalli),BSNL, CLRI, CORDITE FACTORY(DEFENCE)-Ooty, CSIR, ENGINE FACTORY (Defence), GIC, GST & CENTRAL EXCISE, INCOME TAX, JIPMER, IOB,ISRO, OCF, ONGC, INDIA POST, RAILWAY, REPCO BANK, SBI,SHASTHRI BHAWAN(CHENNAI), SYNDICATE BANK.UTTAR BIHAR GRAMIN BANK, BACKWARD CLASSES EMPLOYEES FEDERATION(AP)

Sunday, December 22, 2013

பாராட்டு விழா



அகில இந்திய பிற்படுத்தப்பட்டஊழியர் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கபட்டுள்ள நீதியரசர் மாண்புமிகு ஈஸ்வரய்யா அவர்களுக்கும், இரண்டாவது முறையாக உறுப்பினரராக நியமிக்கப்பட்டுள்ள  மாண்புமிகு கார்வேந்தன் அவர்களுக்கும் பாராட்டுவிழா சென்னை வருமானவரித்துறை கலையரங்கத்தில் 20.12.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. வருமானவரித்துறை பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் தொடர்பு அதிகாரி திரு.சி.வி.பவன குமார், IRS, Joint Commissioner  அவர்களும், திரு.நந்தகுமார்(முன்னாள் தலைவர் வருமானவரி SC/ST சங்கம்), IRS, Joint Commissioner அவர்களும் பங்கேற்று  உரையாற்றி நினைவுப் பரிசினை நீதியரசர் மற்றும் உறுப்பினர் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். பேரமைப்பின் தலைவர் திரு.ரங்கராஜன் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். செயல் தலைவர் திரு.விஸ்வநாதன், செயலாளர் திரு.தனசேகர் அமைப்புச் செயலாளர் திரு.சேதுபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். வருமானவரித்துறையின் செயலாளர் திரு.குமார் வரவேற்புரையாற்றினார். இணைச்செயலாளர் திருமதி.மஞ்சுளா தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் திருமதி.குணவதி நன்றியுரையாற்றினார்.  Income tax, LIC, Atomic,ONGC, Port Trust, Syndicate Bank, GIC,CSIR, CLRI,Postal, RBI, BSNL, Defence ஆகிய துறைகளின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். வருமான வரித்துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளும், SC/ST சங்க நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர். எழுச்சியுடன் திரண்டிருந்த தோழர்கள் நிகழ்வு நிறைவு பெறும் வரை அமர்ந்து நீதியரசர் அவர்களின் சிறப்பான உரையையும், உறுப்பினர் கார்வேந்தன் ஆகியோரின் சிறப்புரையை செவி மடுத்தனர்.  முத்தாய்ப்பாக பேரமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உரிய அங்கீகாரம் விரைவில் கிடைக்கப்பெற உள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலினை நீதியரர் அவர்கள் அறிவித்தபோது அரங்கம் பலத்த கையொலியால் அதிர்ந்தது. குறுகிய காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் தோழர்களின் சிறப்பான ஒத்துழைப்பால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. நிகழ்ச்சியை தமிழ்நாடு வருமானவரித்துறை பிற்படுத்தப்பட்டோர் நல உரிமைப் பேரவை ஒழுங்கு செய்து இருந்தது. நிகழ்வில் அனைவருக்கும் சிறப்பான வகையில் இனிப்பு காரம் தேநீரினை வருமானவரித்துறை பேரவை அளித்து மகிழ்ந்தது.