எல்.அய்.சி OBC சங்கமானது 1992களில் துவக்கப்பட்டது. CBSE 10ஆம் வகுப்பில் Insurance subject படித்துவிட்டால் எல்.அய்.சியில் எந்த தேர்வும் இல்லாமல் உயர் நிலை எழுத்தர் பணி நியமனம் செய்யலாம் என்ற சமூக நீதிக்கு எதிரான, மோசடியான அரசின் உத்தரவை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நீதிமன்றம் சென்றும் அந்த உத்தரவை இந்திய அளவில் ரத்து செய்து OBC/SC/ST யினருக்கான 7000 Backlog vaccancies பெற்றுத்தந்தது இவ்வமைப்பு.இச்சங்கத்தில் உறுப்பினர்கள் அனைவரும் Single member உறுப்பினர்களே.
கடினமான போரட்டங்கள், முயற்சிகளுக்குப் பிறகு இச்சங்கத்திற்கு முறையான அங்கீகாரம் கடந்த ஆகஸ்டு மாதம் நிதி அமைச்சகத்திலிருந்து கிடைக்கப்பெற்றது. அதற்கான முயற்சியில் பேரமைப்பின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நானும். ஓய்வு பெற்ற திரு.வையாபுரி அவர்களும் பாரிய பங்காற்றியுள்ளோம். அவ்வமைப்பின் சார்பாக 21.9.13 அன்று , சென்னையில் திரு.S.K.Kharventhan. Hon'ble Member NCBC, New Delhi அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. எல்.அய்.சியின் தென் மண்டல மேலாளர் திரு. சித்தார்த்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.