
ஏப்ரல்-29, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்து தந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல் முத்தை மணிக்கு லத்தைப்
போஎடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
உழைபின் மேன்மையையும், பகுத்தறைவையும், தமிழ் உணர்வையும்
ஒருசேர ஊட்டிய உண்மைக் கவிஞன் பாவேந்தன்.
புவியை நிறுத்து பொதுவில் நிறுத்து எனப் பாடியவன்,
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை என்றவன்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் எனவும்
உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என பொதுவுடமை பேசியவன்
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீருதல்
முயற் கொம்பே எனவும்
சாணிக்கு பொட்டிட்டு சாமியென்பார் கண்ணுறங்கு, நாணி நீ கண்ணுறங்கு
நகைத்து நீ கண்ணுறங்கு என மூடநம்பிக்கை ஒழிக்கப் பாடியக் கவிஞன்
கொள்கை வெல்ல உழைத்திடுவோம்.
No comments:
Post a Comment