OFFICE BEARERS

K.DANASEKAR (Income tax) - Secretary General - 94459 53388 - kdanasekar@yahoo.com
C.SETHUPATHY, President (ONGC) - 9442500777
R.SENTHAMARAIKANNAN (Engine Factory,Avadi), Working President - 9600159436
R.SELVAM FERNANDO, (IOB)Treasurer - 9381709257

Our Affiliates: ATOMIC ENERGY(DAE), AAI, BHEL(Ranipet), BHEL (Tiruchirapalli),BSNL, CLRI, CORDITE FACTORY(DEFENCE)-Ooty, CSIR, ENGINE FACTORY (Defence), GIC, GST & CENTRAL EXCISE, INCOME TAX, JIPMER, IOB,ISRO, OCF, ONGC, INDIA POST, RAILWAY, REPCO BANK, SBI,SHASTHRI BHAWAN(CHENNAI), SYNDICATE BANK.UTTAR BIHAR GRAMIN BANK, BACKWARD CLASSES EMPLOYEES FEDERATION(AP)

Sunday, July 14, 2013

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை இனத்தவருக்கு பிரதிநிதித்துவம் தரலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தனி ஒதுக்கீடு சட்டம் இல்லைதான். எனினும் பல்வேறு பிரிவினர்களை உள்ளடக்கிய நமது நாட்டில் அவர்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது தேவையானது. இது பற்றி நீதிபதிகளை தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தகுதி அடிப்படையில் நீதிபதி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது ஏற்கத்தக்கதே. அ தேவேளையில் சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களும் மேல்நிலைக்கு வரவேண்டும் என்பதை உணர்ந்து அத்தகையோர் நீதிபதிகள் நியமனம் தொடர்பான குறைந்தபட்ச தகுதியை பெற்றிருந்தால் அவர்களை நியமிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.

No comments:

Post a Comment